Categories
சினிமா

என்னை ஏமாத்திட்டான்….  காதலன் மீது பிக்பாஸ் ஜூலி பரபரப்பு புகார்….!!!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர் ஜூலி. அதன்பிறகு சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். தற்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். மேலும் தனது ஆண் நண்பர் ஒருவருடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடைய காதலன் மனிஷ் ஏமாற்றி விட்டதாகவும், தன்னுடைய பணத்தில் அவருக்கு பல்ஸ் பைக் வாங்கிக் கொடுத்ததாகவும், தன்னுடைய நகைகளை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாகவும் அண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்தில் ஜூலி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்த காதலன் இதுவரை தன்னிடமிருந்து 2.30 லட்சம் பணத்தை வாங்கி இருப்பதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |