Categories
உலக செய்திகள்

எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை…. வெளியான சர்ச்சைக்குரிய பதிவு…. விளக்கமளித்துள்ள பாகிஸ்தான்….!!

செர்பியாவில் செயல்படும் பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து வெளியான சர்ச்சைக்குரிய பதிவிற்கு அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

செர்பியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து அந்நாட்டின் பிரதமருக்கு எதிராக சர்ச்சைக்குரிய பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கானே கடந்த 3 மாதங்களாக செர்பியாவிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் தாங்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்துகொண்டிருக்கிறோம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு மட்டுமின்றி தங்களுக்கு வரவேண்டிய சம்பள பணம் இல்லாமல் எங்களுடைய குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செர்பியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலிருந்து வெளியான சர்ச்சைக்குரிய பதிவு அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான முக்கிய விளக்கத்தை பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது செர்பியாவில் செயல்படும் பாகிஸ்தான் தூதரகத்தின் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |