Categories
டெக்னாலஜி பல்சுவை

அடடே whats App- இல் இப்படி ஒரு அப்டேட்டா?…. இது யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க…. செம மாஸ்….!!!!

உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் பயன்பாட்டிற்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது ஐஓஎஸ் பயனாளிகளுக்கு புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ தலத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அவை என்னவென்றால், பயனர் ஸ்டேட்டஸ் வைத்து ஸ்டேட்டஸை உடனடியாக நீக்குவதற்கு ஒரு புதிய அமைப்பை கொண்டுவந்துள்ளது. இப்போது போஸ்ட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸை நீக்குவதற்கு பயனர்கள் முதலில் 3 புள்ளி மெனுவை கிளிக் செய்து பின் வரும் விருப்பங்களில் நீக்கு என்பதை அழுத்த வேண்டும் இந்த முறையில் பயனர்கள் சில வினாடிகள் செலவிட நேரிடும்.

எனவே வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்கு அடுத்துள்ள செயல் தவிர் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் போஸ்ட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸை உடனடியாக நீக்க முடியும். இந்த வசதியை தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஐஓஎஸ் சாதனையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு அமைப்பில் இந்த வசதி எப்போது கிடைக்கும் என்று எந்தவித அறிவிப்பும் கிடைக்கவில்லை. ஆனால் புதிய அப்டேட்கள் விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |