Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘என்னது நான் அவுட்டா’ …. 3-வது அம்பயரின் முடிவால் ….! கடுப்பான விராட் கோலி …..!!!

நியூசிலாந்து  அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 3-வது அம்பயர் அவுட் கொடுத்ததை கண்டு கேப்டன் விராட் கோலி அதிர்ச்சியடைந்தார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். இப்போட்டியில் 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய விராட் கோலிக்கு ரிவ்யூவில் 3-வது அம்பயர் அவுட் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இதில் 29-வது ஓவரில் அஜாஸ் பட்டேல் வீசிய 2-வது பந்தில் புஜாரா டக் அவுட் ஆகி வெளியேறினார் .

https://twitter.com/intentmerchants/status/1466709041598504960

இதன் பிறகு கேப்டன் விராட் கோலி களமிறங்கினார் .அப்போது 6-வது பந்தை அடிக்க முயன்ற  போது பந்து பேட்டில் பட்டது. இதனால் அஜாஸ் அவுட் என  கள அம்பயரிடம் முறையிட அவர் அவுட் கொடுத்தார் .இதனால் சற்றும் யோசிக்காமல் விராட் கோலி ரிவ்யூ கேட்டார் .இதையடுத்து இந்த வீடியோவை  3-வது அம்பயர் வீரேந்திர சர்மா ஆய்வு செய்தபோது, பந்து முதலில் பேட்டில் பட்டு பின்னர் பேடில் பட்டது போல் தெரிந்தது .ஆனால் 3-வது அம்பயர் அவுட் கொடுத்தது விராட் கோலி மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதனால்  கடுப்பான விராட் கோலி கள அம்பயரிடம் உரையாடிய கோபத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

Categories

Tech |