நேபாளம், ஒமிக்ரான் தொற்று காரணமாக தென்னாப்பிரிக்கா போன்ற 9 நாடுகளுக்கு பயணத்தடை அறிவித்திருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் தேதியன்று ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. அதனையடுத்து, உலக நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மீது பயணத்தடையை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், நேபாளத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகமானது, தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, மலாபி, ஈஸ்வதினி, லெசோதா, ஜிம்பாப்வே மற்றும் ஹாங்காங் போன்ற ஒன்பது நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தடை அறிவித்திருக்கிறது.
ஆனால், குறிப்பிட்ட இந்த நாடுகளை சேர்ந்த, உயர் அதிகாரிகள் அவசர தேவைகளுக்காக தங்கள் நாட்டிற்கு வரலாம். எனினும், அவர்கள் குறிப்பிட்ட காலம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.