பிரபல பாலிவுட் நடிகர் பிரம்மா மிஸ்ரா வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 36 வயதான பிரம்மா மிஸ்ராவுக்கு நவம்பர் 29ஆம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரம்மா வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக பக்கத்திலிருந்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் அவருடைய வீட்டு பாத்ரூமில் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.