Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல் …. வசமாக சிக்கிய வாலிபர்கள் ….காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர்களை   காவல்துறையினர் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரயிலடி கிட்டப்பா பாலம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது இந்த தகவலின் பேரில்        சப்-இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணை நடத்தியதில் அவர் வேதம்பிள்ளை தெருவை சேர்ந்த கார்த்திக் (20)என்பது தெரியவந்தது .அதேபோல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட  அதே பகுதியை சேர்ந்த அரவிந்த்(22)  என்ற வாலிபரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் .

Categories

Tech |