அஜித் கார்த்திகேயாவின் திருமணத்திற்கு போனில் அழைத்து வாழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை” இந்த படத்தில் வில்லனாக நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். சமீபத்தில் தான் கார்த்திகேயாவிற்கு திருமணம் நடந்து முடிந்தது.
இவரின் திருமணத்திற்கு தெலுங்கு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். இவர்களுடைய திருமணத்திற்கு அஜீத் வருவார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு பதிலாக அஜித் இவரை போனில் அழைத்து வாழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.