அமெரிக்க எம்பிக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த ட்ரம்பின் ஆதரவாளரான ரைடர் வினிகர் என்பவருக்கு 33 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஹேம்ப்ஷயர் மாகாணத்தைச் சேர்ந்த ரைடர் வினிகர் என்பவர் அமெரிக்காவின் முன்னால் அதிபர் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்துள்ளார். இவர் கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரம்புக்கு ஆதரவாக அவருக்குப் பின்னால் நிற்காவிட்டால் ஆறு எம்பிகளை தூக்கில் தொங்க விட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கேபிட்டல் போலீஸார் விசாரணை நடத்துவதற்காக வினிகரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
ஆனால் அவர் அப்போது போலீசாரிடம் பேச மறுத்துவிட்டார். மேலும் அடுத்த நாளே பிரேசிலில் தலைமறைவாகி விட்டார். பின்னர் ஒரு மாதம் கழித்து அமெரிக்கா திரும்பிய அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து விட்டனர். இவர் மீதான விசாரணை கோர்ட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி தேதி நடைபெற்றது. விசாரணையில் தான் தவறு செய்ததை ஒப்புக்கொண்ட வினிகர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் குற்றவாளிக்கு 33 மாதங்கள் சிறை தண்டனையும் 15,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.