Categories
தேசிய செய்திகள்

பெரியவர்கள் வீட்டில்…. குழந்தைகளுக்கு மட்டும் பள்ளியா? உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்….!!!!

பெரியவர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ள போது, குழந்தைகள் மட்டும் பள்ளிகளுக்கு வர கட்டாயப் படுத்தப்படுவதா என டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காற்று மாசை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் டெல்லியில் பள்ளிகளை மீண்டும் திறந்த கெஜ்ரிவால் அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

பெரியவர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ள போது, குழந்தைகள் மட்டும் பள்ளிகளுக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்துவது ஏன் என அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பியது. கடந்த வாரங்களில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்ததே தவிர, வேறு எதுவும் நடக்கவில்லை எனவும் உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவது குறித்து, உறுதியான செயல்திட்டத்தை 24 மணி நேரத்துக்குள் கொண்டு வர வேண்டும் என ஒன்றிய மாநில அரசுகளுக்கு கெடு விதித்து வழக்காரம் நாளை ஒத்தி வைக்கப்பட்டது.

Categories

Tech |