கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கும், ரேஷன் பொருட்களை வாங்குவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக 18 வயது முதல் அனைவருக்கும் கோவாக்சின் மற்றும் கோவிஷுல்டு தடுப்பூசிகள் 2 டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டாலும் உயிரிழப்புகள் தடுக்கப்படுகிறது.
அதனால் 100% தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு மாவட்டம் தோறும், ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. இந்த நிலையிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4,00,000 -க்கும் அதிகமானோர் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது.
எனவே மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வைக்கும் நோக்கில் கிருஷ்ணகிரியில் ,தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கும், ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது,