Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை; அன்பழகன் அறிவிப்பு!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்கள் தவிர எஞ்சிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்னதாக வெளியிட்டிருந்த அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில், வருகின்ற 8ஆம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும், திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கீடு தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |