நோர்வே நாட்டில் கொரோனாவின் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட சுமார் 120 பேர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்து கொண்டதையடுத்து அதில் பங்கேற்ற 60 பேருக்கு உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோர்வே நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விருந்து விழா ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த விருந்து விழாவில் கொரோனா தொடர்பான தடுப்பூசியை முழுமையாக செலுத்தி கொண்ட சுமார் 120 விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
இந்த விருந்திற்கு பின்பாக இதில் கலந்து கொண்ட 120 பேர்களில் 60 பேருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து பி.சி.ஆர் பரிசோதனையில் தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையில் வெள்ளிக்கிழமை நடந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விருந்து விழாவில் கலந்துகொண்ட 120 பேர்களில் ஒருவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து சில நாட்களுக்கு முன்பாகத்தான் நாடு திரும்பியுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.