Categories
மாநில செய்திகள்

பெண் குழந்தைகளுக்குரூ.50,000 நிதியுதவி…. விண்ணப்பிப்பது எப்படி…? வாங்க பார்க்கலாம்…!!!

குடும்ப கட்டுப்பாட்டு முறை முக்கியத்துவம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவர்களின் திருமண உதவித்தொகை போன்றவற்றை மையமாகக் கொண்டு தமிழக அரசு சார்பாக பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பத்துக்கு 50,000 உதவித்தொகையும், இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் அந்த குடும்பத்திற்கு குழந்தை ஒன்றுக்கு தலா 25,000 வழங்கப்படும். டெபாசிட் காலத்திலிருந்து ஐந்து வயது வரை மாதம் ஒன்றுக்கு ரூபாய் 150 என்ற அளவில் கிடைக்கும்.

18 வயது வரை இந்த உதவித்தொகை வந்து கொண்டே இருக்கும். இதில் முக்கிய நிபந்தனை என்னவென்றால் விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 72 ஆயிரத்துக்கும் கீழ் குறைவாக இருக்க வேண்டும். அது மட்டுமின்றி பெற்றோரில் இருவரில் ஒருவர் 35 வயதுக்குள் கட்டாயம் குடும்பகட்டுபாடு செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் ஒரே ஒரு பெண் அல்லது இரண்டு பெண் குழந்தைகள் இருக்க வேண்டும். ஆண் குழந்தைகள் இருக்கக் கூடாது.

இந்த திட்டத்தில் விண்ணப்பித்த பிறகு ஆண் குழந்தைகளை தத்தெடுக்கவுகும் கூடாது. மாவட்ட சமூக நல அதிகாரி, மாவட்ட திட்ட அதிகா,ரி குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரிகள், கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு அதிகாரிகள் போன்றவர்களை அணுகி இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். பெண் குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.

Categories

Tech |