Categories
மாநில செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை நீர் திறப்பு…. முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம்….!!!!!

 முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் முக. ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு விவகாரம் தமிழக மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

முல்லை பெரியாரில் தண்ணீர் திறப்பதற்கு முன்னரே அதற்குரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். முன்னெச்சரிக்கை விடுத்த பிறகு படிப்படியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கேரள முதல்வர் கூறியுள்ளார்.

Categories

Tech |