Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“HEADMASTER வீட்டில்” 70 சவரன் நகை……. ரூ1,00,000 பணம் திருட்டு…… பெரம்பலூரில் பரபரப்பு….!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 70 சவரன் தங்க நகை ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். 

பெரம்பலூர் மாவட்டம் வேந்தட்டை பகுதியை அடுத்த சின்னாறு கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் செல்வம் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்ற அவர் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 70 சவரன் தங்க நகை ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் உள்ளிட்டவை திருடு போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் அந்த பகுதி காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |