தமிழகத்தில் நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். நாளை முதல் அடுத்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருச்சி, மதுரை,புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் இருந்து 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பக்தர்களின் வசதிக்காக தமிழகத்திலிருந்து 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு சபரிமலை பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
மக்களே…. தமிழகத்தில் நாளை முதல்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!
