Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்கள்தான் இப்படி செய்தீங்களா…? வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரிடம் வழிப்பறி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள ஏத்தாப்பூர் அரசு டாஸ்மாக் கடையில் மோகன் என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 4-ம் தேதி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது மோகனை  வழிமறித்த ஒரு கும்பல் அவரிடம் இருந்த 6 லட்சத்து 11 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து மோகன் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையில் திருப்பூரில் வழிப்பறி வழக்கில் நெல்லை மகாதேவகுளம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்ற கார்த்திக், கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த குமரேசன் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து செந்தில்குமார், குமரேசன் ஆகிய 2 பேரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏத்தாப்பூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டது தாங்கள் தான் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதன்பின் அவர்கள் 2 பேரையும் நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து ஏத்தாப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது செந்தில்குமாரும், குமரேசனும் நெல்லை தாழையூத்து பகுதியை சேர்ந்த ராஜதுறை என்பவருடன் சேர்ந்து டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து செந்தில்குமார், குமரேசன் மற்றும் ராஜதுரை ஆகிய 3 பேரையும் டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் வழிப்பறி செய்த வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 1 லட்சம் ரொக்கப்பணம், 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |