Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8 படித்தால் போதும்….. அரசு வேலை …… ரூ 24,200 வரை சம்பளம் ….!!

தருமபுரி மாவட்ட நகராட்சி பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக இருப்பதாக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்.

காலியிடங்கள் : டவுன் தொடக்கப்பள்ளி மற்றும் அம்பலத்தவாடி தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக உள்ளது.

சம்பளம் : ரூ. 7,700 முதல் 24,200 வரை சம்பளமாக கொடுக்கப்படும்.

கல்வித் தகுதி : பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவை சார்ந்தவர் : 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பழங்குடியினர் வகுப்பு : 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் : குறைந்தபட்சம் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சம் 40 வயது வரை

விண்ணப்பிக்கலாம், பழங்குடியினர்: குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சம் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் : குறைந்தபட்சம் 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சம் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய குறிப்பு : விண்ணப்பதாரர் குடியிருக்கும் இடத்திற்கும் காலியாக உள்ள சத்துணவு மையத்திற்கும் இடையே உள்ள தூரம் 3 கீ.மீ.க்குள்ளதாக இருக்க வேண்டும்.

Categories

Tech |