Categories
சினிமா தமிழ் சினிமா

”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்திற்கு நயன்தாரா செய்த விஷயம்…… எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாராவே தனது கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தில் நயன்தாராவே தனது கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசுவதாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CW95BObgQ2-/?utm_source=ig_embed&ig_rid=fa543c25-80cd-4f91-8673-bd920e3e9cc1

Categories

Tech |