Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… மக்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை.!!

வெளிநாடுகளில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. சீனா, வங்கதேசம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் பரவியுள்ளது. அதனால் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களுக்கு குறிப்பிட்ட புதிய கட்டுப்பாடுகள் நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த பயணிகள் அனைவரும் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வரும் வரை சுமார் ஆறு மணி நேரம் விமான நிலையத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் மேற்பார்வையிட தமிழக சுகாதாரத் துறை சார்பாக அந்தந்த விமான நிலையங்களுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இந்த கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 477 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் இந்த பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர், இனிவரும் நாட்களில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்

மேலும் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி போட்டால் ஊரடங்கு நிலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தி கொள்வதில் மதுரை மாவட்டம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. முதல் தவணை 71 சதவீதம் பேர் எடுத்துக் கொண்ட நிலையில், இரண்டாவது தவணை தடுப்பூசி 32 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தி கொண்டனர். மதுரை மக்கள் தயவுகூர்ந்து கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |