Categories
மாநில செய்திகள்

மாநிலத்திற்குள் நுழைய புதிய கட்டுப்பாடு…. அதிகாரிகளுக்கு அரசு திடீர் உத்தரவு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பு பணியில் முக்கிய அங்கமாக தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை, நாட்டில் புதிய வகை வைரஸ் பரவிக்கொண்டிருக்கிறது.

அது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினோம். இதுவரை அது போன்ற அறிகுறி புதுச்சேரியில் யாருக்கும் இல்லை. எந்த வகை வைரஸ் பரவி நாளும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வழி தடுப்பூசி செலுத்தி கொள்வது மட்டும்தான். எனவே விடுபட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நோய் பரவாமல் இருக்க வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு கொண்டதற்கான ஆவணங்களை காட்டினால் மட்டுமே புதுச்சேரியில் அனுமதிக்கப்படுவார்கள். இதனை மாநிலம் முழுவதும் தீவிரமாக பின்பற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |