பூனம் பஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான ‘சேவல்’ படத்தின் மூலம் பூனம் பஜ்வா கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த பலர் இவர்தான் பூனம் பஜ்வாவின் காதலர் என கூறி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.