ப்ளிப்கார்ட் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அவ்வபோது அறிவித்து வருகின்றது. இப்போது Flipkart Big Bachat Dhamal விற்பனையைப் பற்றி அறிவித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினி மற்றும் இயர்போன்கள் போன்றவற்றை தள்ளுபடியில் பெறமுடியும். இந்த விற்பனை டிசம்பர் 4, 5, 6 ஆகிய மூன்று நாட்களில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை லைவாக நடைபெறும்.
நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 மணி மற்றும் மாலை 4 மணிக்கு Damaal Deals-களின் நன்மைகளைப் பெற முடியும். இதில் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் இயர்போன்கள், அழகு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை மிக குறைந்த விலையில் வாங்க முடியும். காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை லூட் பஜாரில் ( Loot Bazaar) வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் மிகக் குறைந்த விலையில் சலுகைகள் வழங்கப்படும் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. இதனால் மக்களே ரெடி ஆகுங்கள்.