நீட் தேர்வால் பின்தங்கிய மாணவர்கள் எந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறதா.? என டி ஆர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள நீட் போன்ற கல்வி சம்பந்தமான சில தேர்வுகளால் பின்தங்கிய மாணவர்கள் எந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து மத்திய அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டுள்ளதா.? என மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். திமுக குழு தலைவரான டி. ஆர் .பாலு மக்களவையில் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.அவற்றில் சில பின்வருமாறு, நீட் போன்ற தேர்வுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டு உள்ளதா.? அவ்வாறு மேற்கொண்டிருந்தால் அதன் முடிவு என்ன.? என்று வினவிய அவர் ஒருவேளை ஆய்வு மேற்கொள்ளவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன.? என்று கேட்டுள்ளார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த துறை இணை அமைச்சர் பிரதிமா பெளமிக் மத்திய அரசு அவ்வாறு எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 338b ஐந்தின் படி பின்தங்கிய மக்களின் உரிமையை பாதுகாத்திட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் சமுதாயத்தில் பின்தங்கிய மக்கள் தங்கள் உரிமை பறிக்கப்பட்டு விட்டது என எண்ணும் பட்சத்தில் அந்த ஆணையத்தில் புகார் அளிக்கலாம் எனவும் அவ்வாறு அளிக்கப்படும் புகார்களுக்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதிலளித்தார்.