நடிகர் அஜித் ‘தல’ என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு என்னை அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச பட்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவருக்கென்று தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மொழி ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.. இவரை ரசிகர்கள் அல்டிமேட் ஸ்டார் என்றும், தல என்றும் தான் அழைப்பார்கள்.. தல என்று குறிப்பிட்டால் அது அஜித் தான் என்று தமிழகம் முழுவதும் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.. ஆனால் என்னை தல என்று அழைக்கக்கூடாது என்று தற்போது அஜித் கேட்டுக்கொண்டுள்ளார்..
இதுகுறித்து நடிகர் அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரும் மரியாதைக்குரிய ஊடக பொதுஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,
இனிவரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற்பெயரான அஜித்குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏகே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.
தல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மனநிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்..
அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை ஏற்கனவே துறந்த நடிகர் அஜித் தற்போது தல பட்டத்தையும் துறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
— Suresh Chandra (@SureshChandraa) December 1, 2021
From AJITH Sir !!! #Valimai | #Ajithkumar | #AK | pic.twitter.com/3ly8D6ekyW
— AJITH FANS COMMUNITY (@TFC_mass) December 1, 2021