Categories
மாநில செய்திகள்

JUSTIN:  வரும் 4ஆம் தேதி கனமழை…. வானிலை தகவல்…!!!!

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் வரும் 4ஆம் தேதி கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது: “மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், தெற்கு அந்தமான் அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தெற்கு அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை மறுதினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக மாற்றமடைந்து மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும்.

இந்த புயல் ஆந்திரா தெற்கு ஒடிசா கரையை வரும் 4ஆம் தேதி காலையில் நெருங்கும். இதன் காரணமாக ஆந்திரா மற்றும் ஒரிசா பகுதிகளில் வரும் 4ஆம் தேதி கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |