அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நாளை மறுதினம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கரையை வரும் 4ஆம் தேதி காலை நெருங்கும்.
அதனால் தமிழகத்தில் வருகின்ற 4 மற்றும் 5 ஆகிய இரண்டு தேதிகளில் தென் மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.