சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளிக்கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் பிரபல சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 8:30 மணியிலிருந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.. கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு, கணக்கில் வராத முதலீடு ஆகியவை அடிப்படையில் வருமான வரி சோதனை என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டில் சரவணா ஸ்டோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப் பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது புரசைவாக்கம், தி.நகரில் இருக்கக் கூடிய கடைகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.. இன்று காலை கடை திறப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்காக அங்கு வந்தார்கள்.. அப்போது கடை மூடப்பட்டு சோதனை நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.. வருமான வரி தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்..