மொத்தமாக 2,85,000 மக்கள் தொகையை கொண்ட கரிபியன் தீவுகளில் ஒன்றான பார்படாஸ் இங்கிலாந்திலிருந்து விலக்கு அடைந்து தனி குடியரசு நாடாக அங்கீகாரம் பெற்றுள்ளது.
கரீபியன் தீவுகளில் ஒன்றான அதிக மக்கள் தொகையைக் கொண்ட பார்படாஸ் இங்கிலாந்து அரசாட்சியின் கீழ் இருந்துள்ளது. இதனையடுத்து பார்படாஸ் தீவு கடந்தாண்டு இங்கிலாந்து நாட்டின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுய அதிகாரம் பெற்ற குடியரசு நாடாக மாற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது கடந்தாண்டு விடுக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டு பார்படாஸ் தீவு இங்கிலாந்து நாட்டின் அதிகாரத்திலிருந்து விலக்கு அடைந்து தனிக் குடியரசு நாடாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இதற்கான விழா பார்படாஸ் தீவின் தலைநகரத்தில் நடைபெற்றுள்ளது.
அதில் கடந்த 2018 ஆம் ஆண்டில் பார்படாஸ் தீவின் ஆளுநராக இருந்த டேம் சான்றோ அந்நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இதுகுறித்து இரண்டாம் எலிசபெத் ராணி கூறியதாவது, எதிர்வரும் ஆண்டுகளில் பார்படாஸ் தீவு செழிப்புடனும், மகிழ்ச்சி மற்றும் அமைதியுடனுன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.