Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை மற்றும் இலவச அரிசி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இதனிடையே கொரோனா காலத்தின்போது ரேஷன் கடைகளில், ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டது. அதன்படி மாதந்தோறும் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரேஷன் கடை ஊழியர்கள் கூடுதல் பணியாக மாஸ்க் வழங்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையோடு கார்டு ஒன்றுக்கு தலா 50 காசுகள் என்ற வீதம் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு 27  லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் ஊக்கத்தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், முகக்கவசம் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களின் விவரங்களை விரைவில் அனுப்பும்படி அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |