சிறிய முதலீட்டில் ஒரு கோடி ரூபாய் வரை பலன் தரும் எல்ஐசி பாலிசியை பற்றி இதில் நாம் பார்ப்போம்.
முதலீடுகளில் முதலீடு என்று இரண்டு வகைகள் உண்டு. ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் பெரும்பாலும் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யலாம். ஆனால் ரிஸ்க் எடுக்காமல் நல்ல வருமானம் வேண்டுமென்பவர்கள் எல்ஐசி ஜீவன் சிரோமணி என்ற திட்டத்தில் சேரலாம். இது ஒரு அட்டகாசமான திட்டம். மிகவும் பாதுகாப்பாகவும், நல்ல சேமிப்பையும் தருகிறது. இதில் உறுதித் தொகையாக குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வருமானம் ஒரு கோடி ரூபாய்.
இத்திட்டத்தில் 14 ஆண்டுகளுக்கு தொடர்ந்து சிறு தொகையை முதலீடு செய்து வந்தால் கூட ஒரு கோடி ரூபாய் வரை கிடைக்கும். இந்த திட்டம் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. பாலிசிதாரர் உயிரிழந்து விட்டால் அவரது குடும்பத்துக்கு நிதி ஆதரவு கிடைக்கும். மேலும் மெச்சூரிட்டியிலும் பெரும் தொகை மொத்தமாக கிடைக்கும். உயிரோடு இருந்தால் குறிப்பிட்ட ஆண்டுகளில் உறுதி தொகையில் இருந்து பணம் செலுத்தப்படும்.
அதாவது,
14 ஆண்டு பாலிசி – 10ஆம் மற்றும் 12ஆம் ஆண்டில் உறுதித் தொகையில் 30-30% கிடைக்கும்.
16 ஆண்டு பாலிசி – 12ஆம் மற்றும் 14ஆம் ஆண்டுகளில் 35-35% கிடைக்கும்.
18 ஆண்டு பாலிசி – 14ஆம் மற்றும் 16ஆம் ஆண்டுகளில் 40-40% கிடைக்கும்.
20 ஆண்டு பாலிசி – 16ஆம் மற்றும் 18ஆம் ஆண்டுகளில் 45-45% கிடைக்கும்.