தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸாக உருமாறி பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த வைரஸ் பரவினால் உயிரிழப்பு அதிகமாக ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்காளதேசம், போஸ்ட்வானா, மொரீசியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தடம் பதித்து விட்டது.
எனவே இந்த வைரஸ் இந்தியாவிற்குள் நுழைய விடக் கூடாது என்று மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் நபர்களுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த ஒமிக்ரான் வைரஸ் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளம்பியிருக்கும் நிலையில் இந்தியாவிற்குள் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சூர் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் பேசி அவர், “இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. மேலும் ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிற்குள் நுழைய விடாமல் தடுப்பதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.