மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக தனியார் நிறுவன ஊழியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 9 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குனியமுத்தூர் பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரான ஆஷிக் என்பவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த மாணவர்களின் தந்தை கோவை மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆஷிக்கை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் ஆஷிக் 2 மாணவர்களையும் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு காவல்துறையினர் ஆஷிக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர்.