Categories
மாநில செய்திகள்

கோவை விமான நிலையத்தில்…. ஒமிக்ரான் பரிசோதனை….!!

தென் ஆப்பிரிக்காவில்கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸா உருமாறி பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவை விமான நிலையத்தில் ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த பின் மாற்று விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு வரும் பயணிகளுக்கு ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனையானது சளி மாதிரிகளை சேகரித்து மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த பரிசோதனை செய்யப்படும் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை முடிவு வரும் வரை அவர்கள் தங்களை தாங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |