துருக்கியில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததில் 4 பேர் பலியானதுடன் அதிக சேதம் ஏற்பட்டிருக்கிறது.
துருக்கி நாட்டில் இருக்கும் இஸ்தான்புல் என்ற நகரத்தின் பல பகுதிகளில் சூறாவளி காற்று வீசியதோடு பலத்த மழை பெய்திருக்கிறது. இதில், கடல்கா மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு 129 கிலோ மீட்டர் வேகத்தில், பலத்த காற்று வீசியதில் மிக பிரம்மாண்டமான மணிக்கூண்டு இடிந்து விழுந்துவிட்டது.
நல்லவேளையாக, அந்த மணிக்கூண்டு அருகில் எந்த நபர்களும் இல்லாததால் பாதிப்புகள் இல்லை. மேலும், புயல் உருவாகி ஒரு வணிக வளாகத்தின் மேற்கூரை இடிந்து, வாகனங்கள் நிறுத்துமிடத்தில் விழுந்தது. இதனால், ஐந்துக்கும் அதிகமான வாகனங்கள் சேதமடைந்ததோடு, மூன்று நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில், வேறு இடத்தில் சாலையோரத்தில் இருந்த ஒரு தகரம் சரிந்து விழுந்தது. அப்போது, அந்த வழியாக சென்ற ஒரு நபர் நூலிழையில் உயிர் பிழைத்திருக்கிறார். புயலின் வேகத்தால் ஒரு லாரி கவிழ்ந்ததில், அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. சூறாவளி காற்றால் தற்போது வரை நான்கு நபர்கள் பலியானதோடு, பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால், மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில், கருங்கடல் பகுதியிலும், மத்திய கடற்பகுதியிலும், கடல் சீற்றம் காரணமாக, போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருக்கிறது.