Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதியை ஓவரா புகழ்றாரே எ.வ.வேலு…. அதற்கு இது தா காரணமா….? இது தெரியாம போச்சே….!!!

உதயநிதி ஸ்டாலினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு புகழ்ந்து பேசுவது தொடர்பாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றது.  திமுக மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ஓன்று வாரிசு அரசியல். கலைஞர் கருணாநிதிக்கு பின்பு அவரது மகன் முக ஸ்டாலின் திமுக தலைவர் ஆனார், தற்போது முதல்வராக பதவி வைக்கின்றார். தற்போது உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இப்போதே திமுகவின் எதிர்காலம் என உதயநிதி ஸ்டாலினை பலரும் புகழ்ந்து வருகின்றனர். எம்எல்ஏவாக மட்டும் இருந்தாலும் ஸ்டாலின் மகன் என்பதால் அரசு விழாக்களில் உதயநிதிக்கு பல முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. சட்டப்பேரவையில் தன்னைப் புகழ வேண்டாம் என்று ஸ்டாலின் அமைச்சர்கள் உதயநிதியின் புகழ் பாடுவதற்கு தடை போதவில்லை.

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டில் அடைமழையோடு அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் எ. வ வேலு கொடுத்து விளக்கம்தான் ஹைலைட்டாக இருந்தது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பின் தமிழகத்தில் வெற்றிடம் வந்துவிடக் கூடாது என்பதற்காக உதயநிதிக்கு விழா எடுத்து வருகிறோம்.  பிறந்தநாள் விழா எடுப்பதன் மூலமாக அவருக்கு ஒரு உந்து சக்தி கிடைக்கும் என்றார். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வரை அவரது வலது கரமாக செயல்பட்டவர் வேலு. தேர்தல் சமயத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர் வேலு.  முதலில் வேலுவிடம் பேசிவிடுங்கள், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்ற அளவிற்கு ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்தவர்.

ஆனால் முதல்வரான பிறகு அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி கொடுத்தாலும் ஸ்டாலின் தனது பக்கத்தில் எப்போதும் சேகர்பாபு, மா சுப்பிரமணியன் போன்றவர்கள் வைத்துள்ளார். ஆறு மாத காலமாக இதே நிலைமை நீடித்ததால் உதயநிதி பக்கம் நகரலாம் என்று முடிவெடுத்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |