Categories
தேசிய செய்திகள்

திருமண நிகழ்ச்சியில் தீ…. அட போங்கப்பா…. நமக்கு சாப்பாடு தான்… வைரலான 2 பேர்!!

மகாராஷ்டிராவில் மணப்பந்தல் பற்றி எரிவதை கண்டுகொள்ளாமல் 2 பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது..

மனிதன் உயிர் வாழ்வதற்கு சாப்பாடு என்பது முக்கியம்.. சாப்பிடுவது என்பது அனைவருக்குமே பிடிக்கும்.. அதிலும் கல்யாண வீட்டில் சாப்பிடுவது என்றால் ஒரு தனி பிரியம் தான்.. அங்கு என்ன சாப்பாடு போட்டிருப்பார்கள்.. மட்டனா.. சிக்கனா.. அல்லது சாம்பாரா என்று பலரது மனதிலும் எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும்.. என்னதான் வீட்டில் சாப்பிட்டாலும், ஏதாவது விருந்து வீட்டில் சாப்பிட்டால் தனி கிக்கு தான்… ஆனால் அதற்காக என்ன நடந்தாலும் சாப்பாடு தான் முக்கியம் என்று இருக்கலாமா?.. அப்படி கல்யாண வீட்டு நிகழ்ச்சியில் 2 பேர் இருந்துள்ளனர்..

அதாவது, மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டி பகுதியில் திருமண நிகழ்வு ஒன்றில் மண்டப பந்தல் தீப்பிடித்து எரிந்தாலும் கூட அதனை பெரிதாக கருதாமல் 2 பேர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.. அனைவருமே தீப்பிடிதவுடன் பதறிப்போய் அந்த இடத்திற்கு போயுள்ளனர்.. ஆனால் இவர்கள் அதை கண்டுகொள்ளாமல் சாதாரணமாக ஏதும் நடக்காதது போல உட்கார்ந்து சாப்பிட்டுள்ளனர்.. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்..

Categories

Tech |