விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வீடியோ தொடர்பாக கட்சி செய்தி தொடர்பாளர் வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார்.
முழங்காலளவு தண்ணீரில் தலைவர் நடக்கக்கூடாது என்பதற்காக நாற்காலி போட்டு தம்பிகள் உதவுகிறார்கள் இதுகூட பொறுக்கமுடியாத வன்மத்தர்களும், அறிவு பலவீனமானவர்களும் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள் என்று வன்னிஅரசு கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று திடீரென ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வீட்டில் இருந்து வெளியே வருகிறார். அப்பொழுது முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இதையடுத்து நாற்காலியில் திருமாவளவனை நிற்க வைத்து அதனை மெதுவாக இழுத்தபடி வெளியே வருகின்றனர். கார் வரை இப்படி நாற்காலியிலேயே அழைத்து வருகின்றனர்.
திருமாவளவன் ஷூ போட்டிருப்பதால் அது நனையாமல் இருப்பதற்காக இப்படி அழைத்து வந்தனர். பின்னர் நாற்காலியை நேராக காரில் இறக்கி அதில் ஏறிச் செல்கிறார். இதனை பார்த்த பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஏன் அவர் தண்ணீரில் இறங்கி நடக்க மாட்டாரா? என்ற பலவிதமான விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வன்னியரசு ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் உள்ள ஒரு அறையில் எமது தலைவர் தொல் திருமாவளவன் கடந்த 15 ஆண்டுகளாக தங்கி வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த மழையில் எப்படி கீழ்த்தளம் முழுவதும் தண்ணீர் நிரம்பியதோ அதே போன்று தான் தற்போதும் நிரம்பியது. ஒரு தலைவர் நினைத்தால் ஹோட்டலில் தங்கலாம். ஆனால் அதையெல்லாம் விடுத்து தங்களுடனே தங்கியுள்ளார். இது கூட பொறுக்க முடியாத அரசியல் வன்மத்தர்களும் அறிவு பலவீனமானவர்களும் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள் என்று கூறியுள்ளார் என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார்.