தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸாக உருமாறி பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் மாநிலத்துக்குள் வராமல் தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மும்பை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஓமிக்ரோன் வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மேயர் கிஷோரி பட்னாகர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதுபற்றி கூறிய அவர், விமான நிலையத்தில் வந்து இறங்கும் ஒவ்வொரு பயணிகளையும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பயணிகளை தனிமைப் படுத்துவதற்காகவும் அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே மும்பையில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.