Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் கொரோனா இல்லை….  மத்திய அமைச்சர் தகவல்….!!!

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று இதுவரை ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து உள்ளது.  இதற்கு B 1.1. 529 என்று பெயரிட்டுள்ளனர். இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது. இந்த தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் தொற்று யாருக்கும் வரவில்லை என்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த பட்டு வருகிறோம் என்று மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா பதிலளித்துள்ளார்.

Categories

Tech |