Categories
சினிமா தமிழ் சினிமா

பத்தாண்டுகளில் ப்ளாக் பஸ்டர் சாதனையில் முன்னணி வகிக்கும் ‘தங்கல்’..!!

இந்தியாவின் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களின் பட்டியலில் இந்த தசாப்தத்தில் 2000 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்து முதலிடத்தை பிடித்திருக்கிறது ஆமிர் கானின் தங்கல் திரைப்படம்.

இந்த ஆண்டு யாஹூ இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தசாப்தத்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களில் ஆமிர் கான் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான ‘தங்கல்’ திரைப்படம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இப்படம் இந்தியா மட்டுமல்லாது சீனாவிலும் பெரும் வசூல் சாதனையை ஈட்டியுள்ளது.

dangal placed first in blockbuster films by yahoo india report

நிதீஷ் திவாரியின் இயக்கத்தில் மல்யுத்தத்திற்குத் தன் இரு மகள்களை இந்தியாவுக்காக விளையாட தயார்படுத்தும் தகப்பனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது ‘தங்கல்’ திரைப்படம்.

dangal placed first in blockbuster films by yahoo india report

‘தங்கல்’ திரைப்படத்தைத் தொடர்ந்து சல்மான் கானின் ‘பஜ்ரங்கி பைஜான்’ திரைப்படம் இரண்டாவது இடத்தையும், அதைத்தொடர்ந்து மீண்டும் ஆமிர் கானின் ‘பிகே’ திரைப்படம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. லிஸ்டில் ‘சுல்தான்’, ‘டைகர் ஜிந்தா ஹை’, ‘தூம்-3’, ‘சஞ்சு’, ‘வார்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘தபாங்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடு்த்த இடங்களைப் பிடித்துள்ளன.

Categories

Tech |