தென்னாப்பிரிக்காவில் புதிதாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு வறட்டு இருமல் உட்பட காய்ச்சலுக்கு நிகரான அறிகுறிகளே தென்படுகிறது என்று அந்நாட்டில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா புதிதாக உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிந்து வரும் மருத்துவரான உன்பென் பிள்ளை ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஓமிக்ரான் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு வறட்டு இருமல் உட்பட காய்ச்சலுக்கு நிகரான பாதிப்புகளே தென்படுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களை விட செலுத்தாதவர்களுக்கே ஓமிக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ளது என்றும் தென்னாப்பிரிக்காவில் பணிபுரியும் மருத்துவரான உன்பென் பிள்ளை தெரிவித்துள்ளார்.