ரேஷன் கடையில் வழங்கிய மண்ணெண்ணெயில் தண்ணீர் கலந்திருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொத்தூர் ஊராட்சி மன்ற பகுதியில் இருக்கும் ஒரு ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பருப்பு, அரிசி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அப்போது சத்யா என்ற பெண் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வாங்கிய போது அதில் தண்ணீர் கலந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது பற்றி விற்பனையாளரிடம் கேட்டதற்கு அவர் பலத்த கனமழை பெய்த காரணத்தினால் வெளியே வைத்திருந்த மண்எண்ணெய் பேரலில் தண்ணீர் கலந்து இருக்கலாம் என கூறியுள்ளார். மேலும் இதன் காரணத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.