Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டிருந்த கதவு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பூட்டியிருந்த வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள செண்பகதோட்டம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரி சாலை ஹவுஸிங் யூனிட் பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜேந்திரன் அவரது மனைவி செல்லத்துடன் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் மரக்கடை பேருந்து நிலையம் அருகே மளிகை வியாபாரம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரம் முடிந்ததும் இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ 3 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது.

அதனுடைய மொத்த மதிப்பு 8 லட்சம் இருக்கும் என் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் ஆள் இல்லாததை பார்த்து விட்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராஜேந்திரன் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |