லாரியின் ‘டிஸ்க் ரிங்’ தலையில் இடித்து லாரி கிளீனர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் தொட்டிபட்டில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி கிளீனரான இவர் லாரியில் காற்று நிரப்புவதற்காக வள்ளிபுரம் பகுதியில் உள்ள காற்று நிரப்பும் கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து லாரிக்கு காற்று நிரப்பிக் கொண்டிருக்கும் போது லாரியில் பொருத்தப்பட்டிருக்கும் ‘டிஸ்க் ரிங்’ பிடுங்கி விஜயகுமாரின் தலையில் இடித்துள்ளது.
இதில் விஜயகுமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த நல்லிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.