சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான வீரர் ஷர்துல் தாகூருக்கு தனது நீண்ட நாள் காதலியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் தற்போது சர்வதேச போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.கடந்த 2017-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான அவர் 15 ஒருநாள் 23 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதனிடையே சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியிலும் இந்திய அணியில் ஷர்துல் தாகூர் இடம்பிடித்தார் இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலி மித்தாலி பருல்கர் என்பவருடன், ஷர்துல் தாகூருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது .
இதில் நெருங்கிய உறவினர்கள் ,நண்பர்கள் என 75 பேர் மட்டுமே பங்கேற்றனர். தற்போதைக்கு நிச்சயதார்த்தம் மட்டும் நடைபெற்று உள்ளதாகவும் ,அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பை போட்டி முடிந்த பிறகு திருமணம் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் அடுத்த டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஷர்துல் தாகூருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.