PF கணக்கு வைத்திருக்கும் நபர்கள் தங்களின் கணக்கை ஆதார் கார்டுடன் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி EPFO பயனாளிகள் தங்களது UAN v எண்ணை ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும். அதற்கு முன்பு பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் கடைசி தேதி நவம்பர் 30-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றே கடைசி நாள் என்பதால் பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் படி பிஎஃப் பயனாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால் நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் செலுத்தக்கூடிய தொகை உங்கள் கணக்கிற்கு வந்து சேராது. அதுமட்டுமல்லாமல் கட்டணங்களில் தாமதமும் ஏற்படும்.
ஆன்லைன் மூலம் பிஎஃப் கணக்குடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?
EPFO நிறுவனத்தின் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ இணையதளத்துக்கு செல்லவும்
உங்கள் UAN நம்பர் மற்றும் பாஸ்வோர்ட் கொடுத்து Log in செய்யவும்
அதில் Manage பிரிவை கிளிக் செய்யவும்.
திறக்கும் புதிய பக்கத்தில் Aadhaar ஆப்ஷனை கிளிக் செய்து ஆதார் எண் மற்றும் பெயர் பதிவு செய்து Save செய்யவும்.
பின்னர் உங்களது விவரங்கள் சரிபார்க்கப்பட்டு PF கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிடும்.