Categories
மாநில செய்திகள்

ஒமிக்ரான் பரவினால் உயிரிழப்பு அதிகரிக்கும்…. ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை….!!

தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸாக உருமாறி பரவ தொடங்கிய உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த புதிய வைரஸ் இந்தியாவிற்குள் பரவ விடாமல் தடுக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து தமிழக அரசுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு  மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் புதிய வகை கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், விமான நிலைய இயக்குனர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகிய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கூறியது, கொரோனா தற்போது கட்டுக்குள் வந்துவிட்டது என்று பலரும் அலட்சியமாக முகம் அணியாமல் இருப்பது மிகப்பெரிய தவறாகும். எந்த ஒரு வைரசும் நம்மை தாக்காமல் இருக்க வேண்டுமென்றால் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் பல நாடுகளில் வேகமாகப் பரவுகிறது. ஆனால் இந்தியாவிற்குள் இதுவரை நுழையவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனென்றால் அந்த வகை வைரஸ் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும், அதிக உயிரிழப்பு கூட ஏற்படும்.

தற்போது கொரோனா வைரஸ்க்கு தான் தடுப்பூசி உள்ளது. இதிலும் 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பலர் உள்ளனர். எனவே அவர்கள் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் முதல் தவணை தடுப்பூசி செலுத்து கொள்ளாதவர்கள் விரைந்து போட்டுக் கொள்ள வேண்டும். புதிய வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, பிரேசில், வங்காளதேசம், போட்ஸ்வானா, மொரிசீயஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு வைரஸ் தொற்றி இல்லாவிட்டாலும் சொல்லும் அறிவுரை என்னவென்றால், அரசு சொல்லும் வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அதில் கண்டிப்பாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது மழைக்காலமாக இருப்பதால் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும் வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |