Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ :’வெற்றியை தவறவிட்ட இந்தியா’ ….! டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட் போட்டி ….!!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் தொடங்கியது .இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 345 ரன்கள் குவித்தது. இதன்பிறகு களமிறங்கிய  நியூசிலாந்து அணி 296 ரன்கள் எடுத்தது .இதனால் 49 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது .இதனால் இந்திய அணி மொத்தம் 283 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடியது .இறுதியாக 4-ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 4 ரன் எடுத்தது. இதனிடையே இன்று கடைசி நாள் ஆட்டத்தில் 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது .

இதில் டாம் லாதம் – வில்லியம் சோமர்வில் இருவரும் அபாரமாக விளையாடி விக்கெட் எடுத்தனர் இதனால் மதிய உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 35 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் குவித்தது .இதன்பிறகு ஆட்டம் இந்திய அணி பக்கம் திரும்பியது .இதில் சோமர்வில் 36 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்ததாக  டாம் லாதம் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் தேநீர் இடைவேளைக்குப் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரியத் தொடங்கியது. இதனால் நியூசிலாந்து  அணி 155 ரன்னில் 9 விக்கெட் இழந்தது. இதனால் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக காணப்பட்டது ஆனால் கடைசி விக்கெட் ஜோடி சேர்ந்தஅஜாஸ் பட்டேல்- ரச்சின் ரவீந்திரா  இருவரும் நிலைத்து நின்று விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தனர் .இறுதியாக 5-ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது .இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

Categories

Tech |